Posts

சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை - என் பார்வை

Image
சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை மிக நுட்பமாகவும், விரிவாகவும் எழுதப்பட்ட கட்டுரை ஜமீலா. இலக்கிய நயம் பாராட்டல் கட்டுரைகளுக்குண்டான எல்லா இலக்கணங்களோடும் பொருந்தி வரும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். இஸ்கான் ஊர்வலத்தில் சிறுவர்களுக்குள் பார்த்த வில் சுமந்த ராமன் உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய ஓர் எளிய கேள்விக்கு விடை தேடிச் செல்லும் பயணமாகவே இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது. அன்பே உருவான ராமன், தாடகையை வதம் செய்யத் தயங்கிய ராமன், ராமகாதையின் பிற்பகுதியில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவிக்கும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டான் என்பதுதான் அந்தக் கேள்வி. கட்டுரை ஆசிரியர் சிந்தித்து, ஆராய்ந்து அதன் காரணம் ராமன் சீதை மேல் கொண்டிருந்த காதலே என்ற முடிவுக்கு வருகிறார். அவன் தசரத ராமனோ, கோசலா ராமனோ அல்ல, சீதா ராமனே என்று உறுதியாகக் கூறுகிறார். அதற்குக் கம்பனைத் துணைக்கழைத்துக் கொள்கிறார். அவனது பாடல்களிலிருந்து, வால்மீகியில் நாம் காண இயலாத காதல் ததும்பும் பகுதிகளை நமக்கு எடுத்து விளக்குகிறார்.  கம்பன் மிதிலைக்குள் நுழைகையில் இருவரும் பார்த்துக் கொள்வதிலிருந்து துவங்கி (That அண்ணலும் நோக்கினான் moment!)

எரி நட்சத்திரம் - சிறுகதை, பாலாஜி ராஜூ - என் பார்வை

Image
  எரி நட்சத்திரம் - சிறுகதை, பாலாஜி ராஜூ அன்புள்ள பாலாஜி, கதை எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் மொழி தீவிரமாகவும், தத்துவார்த்தமாகவும் ஒழுகிச் செல்கிறது. அழகாகக் கதையைக் காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள். உரையாடல்கள் தேர்ந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை வருணனை மிகத் துல்லியமாக வந்திருக்கிறது. நீங்கள் கதையில் சாதிக்க நினைத்ததைச் சாதித்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். மலைகளின் மீது அவருக்கிருக்கும் பிரேமை நன்றாக வெளிப்பட்டிருந்தது. இயற்கை இக்கதையில் ஒரு பாத்திரமாகவே வெளிப்பட்டது. அந்தத் தம்பதிகளின் பயணம் குறித்த குறிப்புகளும் அழகானவை. கதையின் முடிவும் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு சிறுகதைக்குத் தேவையான சின்ன வெளிப்பாடு. “ஆம்” என்று மட்டும் சொன்னேன் - என்ற வரி மிகக் கனமானது. இவ்வளவு சிறிய கதையில் உங்களால் கனமான விஷயத்தைக் கூற முடிகிறது. எனக்குச் சற்றுப் பொறாமை. எரி நட்சத்திரத்தில் துவங்கி அதிலேயே முடிவது கதையை அழகாக்குகிறது. அவர் எரி நட்சத்திரம் பார்த்த அதே வீட்டில், அதே சாளரம் வழியே, கதை சொல்லியும் பார்ப்பது கவித்துவமான தருணம். ஒரு புனைவெழுத்தாளனுக்குரிய மொழி உங்களுக்குக் கைவந

கரிப்பு - சிறுகதை, பாலாஜி ராஜூ - என் பார்வை

Image
  கரிப்பு - சிறுகதை, பாலாஜி ராஜூ அன்புள்ள பாலாஜி, கதை மிகவும் நன்றாக வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்க இயலவில்லை. மொழி நன்றாக கைகூடி வந்திருக்கிறது. உங்கள் ஊர் சூழ்நிலையை அப்படியே கண்முன் வரைந்து காட்டியிருக்கிறீர்கள். நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட கதையைப் போல் தெரிகிறது. இதைப் பாராட்டாகவே சொல்கிறேன். கதையின் ஒவ்வொரு பகுதியிலும் முழுமை கூடியிருக்கிறது. கிணற்றை ஒரு படிமமாக மாற்ற நீங்கள் எந்த சிரத்தையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தது நல்லது. எனவே கிணறு இயல்பாகவே படிமமாகி விட்டிருக்கிறது. ஊரின் மக்களும், அவர்களது வாழ்வியலும் அழகாக, நேர்த்தியாக, அவற்றுக்கான தனித்துவம் மிக்க சொற்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வாசிக்க மிகச் சுகமாக இருந்தது. லாரி ஓட்டும் மலையாளிகள் குளிக்கும் உப்புத்தண்ணிக் கிணறு அவர்களைக் காவு வாங்கி விடுவதைக் கதையாக்கி இருப்பது சிறுகதை வடிவம் குறித்த உங்களது போதத்தைக் காட்டுகிறது. நேரடியாகக் கதை சொல்லல் முறையைக் கையாண்டிருக்கிறீர்கள். உண்மையில் இப்படிச் சொல்வதுதான் கடினம். எனக்கு எந்தக் குறையும் கண்ணில் படவில்லை. இது ஆகச் சிறந்த கதையா என

நீலத்தழல் - சிறுகதை - அரூ அறிபுனைகதைப் போட்டியில்

Image
ஒரு கதை வைத்திருந்தேன். அதில் கொஞ்சம் அறிவியல் இருந்தது. நண்பர் விஸ்வனாதன் மகாலிங்கம் அரூ இதழுக்கு அறிபுனை கதைப் போட்டிக்குக் கதை அனுப்பும்படி அறிவுறுத்தினார். இது அறிவியல் புனைகதை என்ற வகைமைக்குள் வருமா என்ற ஐயத்தோடுதான் அனுப்பினேன். அவர்களும் அவ்வாறே நினைத்திருக்கிறார்கள். சிறப்பாகக் குறிப்பிட்ட இருகதைகளில் ஒன்றாக இக்கதையை ஒரு குறிப்புடன் வெளியிட்டிருக்கிறார்கள்.  கீழே வருவது அவர்கள் தந்த குறிப்பு. ‘நீலத்தழல்’ நேர்த்தியாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டுள்ள கதை. ஆனால், இக்கதையில் நிதர்சனமான அறிவியல் இருக்கின்றதே தவிர, அறிவியல் ஊகம் இல்லை, புதிய அறிவியல் கற்பனை இல்லை. ஆகவே அறிவியல் புனைவு என்கிற வகைமைக்குள் வராது. ஆனாலும் இக்கதையை குறிப்பிடத்தகுந்த கதையாக வெளியிடுவதற்குக் காரணம் அறிவியலை வெறும் கோட்பாடுகளாகவும் கருதுகோள்களாகவும் பட்டியலிடாமல், ஒரு வாழ்வனுபவமாக சித்தரித்துள்ளார் ஜெகதீஷ் குமார். உயிரொளி உமிழ்வு (bioluminescence) எனும் அறிவியல் கருதுகோளை ஒரு கட்டுரையாகப் படிக்கலாம், ஆவணப்படமாகப் பார்க்கலாம். ஆனால் இப்படி ஒரு புனைவாகப் படிக்கும்போது அது நமது உடலுக்குள் இறங்கிச்சென்று, ஏதோ ஒரு

பேராசிரியரின் கிளி - சிறுகதை

Image
பேராசிரியரின் கிளி சிறுகதை நன்றி: சொல்வனம் - அக்டோபர் 23, 2022 ஆர்தர் ரேவனல் ஜூனியர் பாலத்தைத் தாண்டியபிறகு, 21ம் எக்ஸிட் எடுத்து டிராஃபிக் சிக்னலில் நின்றபோது இடது பக்கம் திரும்ப வேண்டுமா அல்லது வலது பக்கமா என்று ஸ்ருதிக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஸ்ருதி தன் காரை கோல்மன் புலவார்டுக்குள் திருப்பிய மறுகணமே திசைகாட்டும் கருவியின் பெண்குரல் அமைதியடைந்து, அவளது அலைபேசியின் தொடுதிரை கடைசியாகக் காட்டிய வரைபடத்துடன் உறைந்து விட்டது. கூகுள் வரைபடத்தில் கூட அவளது பேராசிரியரின் வீடு பட்டியலிட்டிருக்கப்படவில்லை! அனிச்சைச் செயலாக, விஷியஸ் பிஸ்கட் தாண்டி இருந்த லான்சிங்க் டிரைவில் திரும்பினாள். அந்தச் சாலையில் இருந்த பாம்  வீதியின் வடக்கு முனையில்தான் டாக்டர் ராமச்சந்திரனின் வீடு இருப்பதாக லெய்ச்சி சொல்லியிருந்தான். அவனுக்கு கூகுள் வரைபடம் போன்ற புதிய தொழில் நுட்பங்களில் பெரிய நம்பிக்கையில்லை. என்னதான் அறிவியல் வளர்ச்சி  பெற்றிருந்தாலும் நமது மூளைத்திறன்தான் கடைசியில் கைகொடுக்கும் என்பான். தனது உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சியில் கூட அவன் இதே போன்று மிக மெதுவாக நகரும், மரபார்ந்த வழிமுறைகளைத்தான் பின்ப

கல்லளை - சிறுகதை

Image
கல்லளை சிறுகதை நன்றி: சொல்வனம் - செப்டம்பர் 25, 2022 1 “என் ஒத்தப்புள்ள இனி எஞ்சி நிக்குமா? அது வளந்து நிக்கறத எங்கண்கொண்டு பாப்பனா?” மடியில் படுத்து முலைப்பாலுறிஞ்சிக் கொண்டிருந்த மகனின் தலையைத் தடவிக் கொடுத்தபடி பொம்மி கேட்டாள். அவள் கணவன் தன் சிக்குப் பிடித்த தாடியைச் சொறிந்தபடி, போர்த்திக் கொண்டிருந்த ஜமக்காளத் துணியை இறுக்கி, குளிரை அடக்கிக் கொண்டான். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவனிடத்தும் அதே கேள்வியே தொக்கி நின்றது. கங்காமூலாவெங்கும் மலைக்காடுகளில் பரவி வாழ்ந்த ஒவ்வொரு மலைச்சாதிக் குடியானவனுக்கும், குடியானத்திக்கும் கடந்த ஆறுமாதங்களாக இதே கேள்விதான். இதே கவலைதான்.  ஐந்துகுடிப் பெரியவர்களும் குலமுன்னோர் வழிபாட்டு நினைவிடமான ஹிரயிரிக்குச் சென்று தொழுது வணங்கிவிட்டு, அருகிலிருந்த தோதகத்தி மரத்தடியில் அமர்ந்திருந்தனர். இருட்டு சாரைப்பாம்புக் கூட்டத்தைப் போல சரசரவென்று எங்கும் பரவிக் கொண்டிருந்தது. விரைந்து இறங்கும் கடுங்குளிரை விரட்ட எதிரில் சவுக்குக்கட்டைகளைக் கும்பாரமாகக் குவித்து நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. குடிக்கு எட்டுப் பேராக நாற்பது பேர் பெரியவர்கள் முன்ன