Posts

Showing posts from November, 2012

Life of Pi 2

Image
வெகு சீக்கிரமே படகில் உள்ள காலொடிந்த வரிக்குதிரை கழுதைப் புலியாலும், கழுதைப் புலியும், உராங்க் உடானும் பெங்கால் புலியாலும் கொல்லப்பட்டு விடுகின்றன. பிறகு நாவலின் பெரும்பாலான பகுதியை பையும், ரிச்சர்ட் பார்க்கருமே கழிக்கின்றனர் (அதுதான் புலியின் பெயர்). இருவரும் அவரவர்களுக்கு எல்லை வகுத்துக் கொண்டு அதிலிருந்து நகராமல் இருக்கின்றனர். படகிலிருந்து குடிநீர் பாட்டில்கள், டின் உணவுகள், மீன் பிடி தூண்டில், மழைநீரைச் சேகரிக்கும் கருவிகள் மற்றும் இன்னபிற பொருட்களையும் கண்டெடுக்கிறான் பை. இந்தப் பொருட்கள் சிலநாட்கள் படகில் உயிரோடிருக்க அவனுக்கு உதவுகின்றன. மூன்று நாட்களுக்குப் பிறகு தண்ணீர் கிடைத்து அவன் குடிக்கும் போது அடையும் ஆனந்தத்தை மார்டெல் விவரிக்கும் போது, உயிர் பிழைக்க எந்தவித சாத்தியமுமே இல்லாத நிலையில் நடுக்கடலில் ஒரு பட்கில் மாட்டிக் கொண்டு துன்புறுவது எத்தனை பயங்கரமானது என்பதை நம்மால் உணர முடிகிறது. மெதுவாக மீன் பிடிக்கவும் கற்றுக்கொள்கிறான் பை. தான் பிடித்த மீன்களையும், கடலாமைகளையும் பச்சையாகவே உண்டு வாழ ஆரம்பிக்கிறான். அவன் பிடித்ததில் பெரும்பகுதி ஆர்.பி (ரிச்சர்ட் பார்க்கர்)

Life of Pi 1

Image
Life of Pi யான் மார்டேல் எழுதி மான் புக்கர் பரிசு வாங்கிய நாவல் . வேறு ஒரு நாட்டை மையமாக வைத்து நாவல் எழுதுவதற்காக வந்த மார்டல் , பதினாறு வயது இந்தியச் சிறுவன் ஒருவனுடைய கதையை கேட்ட பிறகு அவரது மொத்த திட்டமும் மாறிவிட்டிருக்கிறது . இந்த நாவல் பற்றி எஸ் . ராமகிருஷ்ணன் தன் தளத்தில் குறிப்பிட்டிருந்தார் . நிதி பெருக்குவதற்காக எங்கள் பள்ளியில் நிகழ்ந்த ஒரு விலைக் குறைப்பு விற்பனையின் போது இந்த நாவல் என் கண்ணில் பட்டது . 2002 ல் வெளியான புத்தகம் என்று நினைக்கிறேன் . ஆனால் பார்க்க ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியானதைப் போல் அரதப் பழசாக   இருந்தது . கிட்டத்தட்ட நூறு பக்கங்கள் பைண்டிங்கிலிருந்து கழன்று வந்து விட்டன . படிக்க முயற்சி செய்தால் மீதி பக்கங்களும் வந்து விடும் போலிருந்தது .  ஆனால் அதனுடைய விலைதான் என்னை ஈர்த்தது . ஐந்து ருபியா , இந்திய மதிப்புக்கு பதினைந்து ரூபாய் . எனவே எல்லாப் பக்கங்களும் இருக்கின்றனவா என்பதை உறுதிப் படுத்திக்கொண்ட பிறகு அதை வாங்கி உடனே படிக்கவும் ஆரம்பித்து விட்டே